
தமிழகம்
இன்று முதல் இது கட்டாயம்: காவல்துரை அதிரடி..!
இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சரத் கர் கடந்த ஐந்து மாதத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டி 98 பேர் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் போக்குவரத்து சாலை ஆக்கிரமிப்பு என்பது அதிகரித்துள்ளதால் இவ்வாறான விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது என கூறினார். இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் அவர்களில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தார்.
