இனி குழந்தைகளுக்கும் ஹெல்மெட்! 4 வயது குழந்தை இருந்தால் 40 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே!!

தமிழகத்தில் பெரும்பாலான சாலை விபத்துகள் அதிக அளவு இரு சக்கர வாகன ஓட்டிகளால் நிகழ்கிறது. பலரும் ஹெல்மெட் அணியாததால் விபத்தின்போது அவர்கள் உயிரிழந்து விடுகின்றனர். இதில் குழந்தைகளுக்கும் அவ்வப்போது உயிரிழப்பும் நிகழ்கிறது.இனி குழந்தைகளுக்கும் ஹெல்மெட்

இதனை தடுக்கும் வகையில் தற்போது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் என்ற சட்டம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் நான்கு வயது குழந்தையுடன் செல்லும் போது அதிகபட்ச வேகத்தை நாம் 40 கிலோ மீட்டருக்குள் நிர்ணயிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு குறித்த வரைவு விதிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது. 9 மாதம் முதல் நான்கு வயது வரை குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் தலைக்கவசம் அணிந்திருப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் வரைவு விதிகளிள் கூறப்பட்டுள்ளது.

4 வயது குழந்தையை ஓட்டுநர் உடன் இணைத்து இருக்கும்படி பெல்ட் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு விதிகளை ஏதேனும் திருத்தம் அல்லது உடன்பாடு இல்லாதிருப்பின் அது குறித்து மக்கள் தெரிவிக்கலாம் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

இதனால் வரும் நாட்களில் குழந்தைகளுக்கு ஹெல்மட் மற்றும் பெல்ட் ஆகியவை இருசக்கர வாகனத்தில் கட்டாயம் இருக்கும் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment