4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்! 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பைக் ஓட்டக் கூடாது!!
தமிழகத்தில் தினந்தோறும் சாலை விபத்து நடந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இருசக்கர வாகன விபத்து தான் அதிக அளவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இவை தமிழகத்திலேயே என்றால் இந்திய அளவில் மணிக்கு ஒருமுறை நிகழலாம் என்பதும் தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது.
பெரும்பாலான சாலை விபத்துகளில் உயிர் இழப்பது ஹெல்மெட் அணியாமல் தான். இதனை தடுக்கும் விதமாக பலரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற ஒன்றிய அரசு கூறியுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1989 இல் பிரிவு 138 விதியில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது.
அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஓராண்டுக்கு பின் புதிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கு வரும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் இயக்கக் கூடாது என்று அரசு கூறியுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வழிகாட்டு நெறிமுறையில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் வழிகாட்டும் நெறிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.
