”ஹெல்மெட் போட்டால்தான் பெட்ரோல்”…. வெளியானது அதிரடி அப்டேட் !!
தமிழகத்தில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கொண்டு வந்தும் சாலை விபத்துகளை முழுமையாக குறைக்க முடியவில்லை.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தொழிற்சாலைகளில் அனுமதிக்கப்படாதது, மதுக்கடைகளில் மது வாங்க தடை, ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க தடை போன்ற பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் இதற்கு ஒரு படியாக மேலே சென்று ஹெல்மெட் இல்லையென்றால் பெட்ரோல் கிடையாது என கரூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுவதை தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரின் உத்தரவின்படி இம்மாதிரியான அறிவிப்பை வெளியிட்டதாக பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹெல்மெட் அணியாமல் இருந்தால் பெட்ரோல் கிடையாது என்றும் மீறி வந்த வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
