ஹலோ நான் ஸ்டாலின் பேசுறேன்! குறைதீர்க்கும் குரல்-பேரிடர் மையத்தில் ஆய்வு!!

நம் தமிழக முதல்வர்  ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் வெள்ளத்திலும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.மழை வெள்ளத்திலும் செய்தியாளர்களுக்கு முதல்வர்  ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

ஸ்டாலின்

இந்த நிலையில் தற்போது அவர் மாநில  பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

மழை தொடர்பான புகார்கள் குறித்து கேட்டறிந்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாநில பேரிடர் மையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பிற்கு முதலமைச்சர்  ஸ்டாலின் தாமே பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு என்பது குறித்தும் பேரிடர் மையத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.இதனால் இந்த மழை வெள்ள காலத்திலும்கூட முதல்வர்  ஸ்டாலின் நேரில் சென்று களப்பணி ஆற்றுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment