பீஸ்ட் படத்தை போல வாரிசு படத்திலும் அதே ஹெலிகாப்டர் சீன்! வெளியான படப்பிடிப்பு புகைப்படம்!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘ வாரிசு ’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.விஜய்யின் 66வது படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே விஜய் பாடிய வாரிசு பாடல் முழு லிரிக் வீடியோ தற்போழுது வெளியாகியுள்ளது.இந்த அப்டேடை விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் OTT ரிலீஸ் தேதி தெரியுமா? மாஸ் அப்டேட்!

மேலும் பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, 1.17 Million லைக்ஸ் பெற்றுள்ளது.தற்போது திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது .

படத்தில் ஹெலிகாப்டர் வைத்து விஜய்யின் மாஸ் காட்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படபிடிப்பு தளத்தில் ஹெலிகாப்டர்-ன் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் இது போன்ற ஹெலிகாப்டர் காட்சிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews