விபத்திற்கு என்ன காரணம்? ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!!

நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 ராணுவ வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.ஏனென்றால் விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் பெட்ரோல் விமானம் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

முப்படை தலைமை தளபதி

குறிப்பாக இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.உயிர் பிழைத்த கேப்டனின் உடலில் 80% தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி தற்போது மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. தடவியல் துறை நிபுணர்கள், ராணுவ அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த கருப்புப்பெட்டி கிடைத்தது.

மீட்கப்பட்ட ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி டெல்லி அல்லது பெங்களூர் கொண்டு சென்று ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி ஆய்வு செய்த பிறகே ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment