நம் தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவமழையின் போது தான் அதிக மழை கிடைக்கும். ஆனால் தற்போது தென் மேற்கு பருவமழையின் காலத்திலேயே பல இடங்களில் மழைநீர் அதிகளவு கிடைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு முழுவதும் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததாக தகவல் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், இறையூர், ஆவினக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. மேலும் கடலூருக்கு அருகே உள்ள திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஆங்காங்கே மிதமான மழை பெய்ததாகவும் தெரிகிறது.
அதன்படி ஆரணி, சேவூர், செய்யாறு, திருவத்திபுரம், தூளி, அனக்காவூர், இருமந்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும் அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், செந்துறை, தா.பலூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.