அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு நீடிக்கும்!: இந்திய வானிலை ஆய்வு மையம்;

டிசம்பர் மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கடும் குளிர் தான். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இந்தியாவில் கடும் பனி பொழிவு நிலவுகிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பனி மழை பெய்து வருகின்றன.

பனிப்பொழிவு

இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த கடும் பனி பொழிவு நீடிக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஜம்மு-காஷ்மீர், இமாச்சலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா உத்தர பிரதேசம், சண்டிகரில் கடும் பனிப்பொழிவு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அங்கு வெப்பநிலையின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் அங்கு வாழும் மக்கள் கடும் பனி பொழிவில் அவதிப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment