கொட்டித் தீர்த்த கனமழை: மும்பை மழைக்கு 15 பேர் பலி!

5a815efeba11cc40d27a6706c99e2bac-1

கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொட்டி தீர்த்த கன மழை காரணமாக மும்பையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாக உள்ளது என்றும் மும்பையில் உள்ள ஒரு பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததால் 15 பேர் வரை பலியாகி இருப்பதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது 

மும்பை நகரமே தற்போது வெள்ளத்தில் மிதப்பதாகவும், குறிப்பாக புறநகர் இரயில் நிலையத்தில் தண்டவாள பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன 

மேலும் செம்பூர் என்ற பகுதியில் குடியிருப்பு பகுதியில் மழைக்கு தாங்காமல் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானார்கள் என்றும் 16 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பைக்கு மேலும் 48 மணி நேரத்திற்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இன்று காலை ஆறு முப்பது மணி நிலவரப்படி மும்பை மற்றும் புறநகரில் 120 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழைபெய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment