நவம்பர் 1ல் தென் மாவட்டங்களில் மிக பலத்த மழை: வானிலை மையம் அறிவிப்பு!

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 1ஆம் தேதியில் தென் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கனமழை

அதன்படி நவம்பர் 1ஆம் தேதியில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் இதர  மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பர் 2,3 ஆம் தேதியில் தென்மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment