Connect with us

மார்ச் 4 முதல் தமிழ்நாட்டில் கனமழை; 7 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!

rain chennai4101 1638687228 1

Tamil Nadu

மார்ச் 4 முதல் தமிழ்நாட்டில் கனமழை; 7 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!

மார்ச் 4 முதல் தமிழ்நாட்டில் கனமழை; 7 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இந்த ஆண்டு தொடங்கியதும் மழையின் தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. அதோடு மட்டுமல்லாமல் ஜனவரி மாதம் தமிழகத்தை விட்டு வடகிழக்கு பருவமழை முற்றிலுமாக விலகியது. இந்த நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் பெரும்பாலும் வெப்பமான சூழ்நிலை நிலவும் என்று மக்கள் கருதி இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.

மார்ச் 4 ஆம் தேதி முதல் தமிழ் நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் மார்ச் 4 ஆம் தேதி முதல் தமிழ் நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 7 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மார்ச் 5ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மார்ச் 3ஆம் தேதி தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top