குஜராத்தில் ஒருவாரமாக கொட்டிய கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டுகின்றனர். இதனால் வெள்ளம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இதுவரையில் 50 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு 14 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையினால் பல்வேறு அணைகள் நிரம்பி வழிவதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த சூழலில் வதோதரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றில் வசித்து வந்த முதலைகள் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தனர்.
இதனால் முதலைகளை பிடிக்கும் பணிகளில் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் முதலைகள் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது