Connect with us

விடாமல் கொட்டி தீர்த்த கனமழை: டெல்லியில் விமான சேவை பாதிப்பு!

airport mumbai 022519

செய்திகள்

விடாமல் கொட்டி தீர்த்த கனமழை: டெல்லியில் விமான சேவை பாதிப்பு!

டெல்லியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்துள்ளது. விமான சேவை பாதிக்கப்பட்டதோடு சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

டெல்லியில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டது போலவே மழை பெய்துவருகிறது. இந்நிலையில் 115 டிகிரி பாரன்கிட் வெப்பநிலை பதிவானதையடுத்து பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக பகல் நேரங்கள் மட்டுமல்லாது இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருந்தது.

இதனிடையே இன்று அதிகாலை முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லியின் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் அரியானா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

தற்போது அம்மாநிலங்களில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதாகவும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இன்றைய தினத்திலும் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top