Connect with us

7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Tamil Nadu

7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

d60cccbdbc56c903c701cb596bfabf75

தமிழகத்தின் மழை நிலவரங்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top