தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல் !!
தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நாளை, நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக்கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் தென்மேற்கு வங்கக் கடல் மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
