5 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம், நல்ல மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட நீராதாரங்கள் நிரம்பி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டமாக இருந்தாலும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வரும் 27ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment