5 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

d60cccbdbc56c903c701cb596bfabf75

தமிழகத்தின் மழை குறித்த நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அந்த மாவட்டங்கள் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும் நாளை முதல் ஜூலை 24ஆம் தேதி வரை நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment