சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

d60cccbdbc56c903c701cb596bfabf75

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, புதுவை ஆகிய பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் நாளை மறுநாள் புதுவை காரைக்கால் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் வரும் 27ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எனவே அந்த பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment