4 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

நான்கு மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை, தேனி, நீலகிரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை இன்று மிதமான மழை பெய்யும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment