13 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

கோவை நீலகிரி உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது 

சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று கோவை நீலகிரி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மழை பெய்யும் மாவட்டங்களாக கூறியவை பின்வருமாறு: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகா், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment