13 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

ad3bec7158855592859f4cc985840de6-2

சென்னை உள்பட தமிழகத்தில் மழை நிலவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது

வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் சற்று முன்னர் 13 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன்படி இன்று தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, சிவகங்கை விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை அதாவது ஜூலை 2-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை மறுநாள் அதாவது ஜூலை 3ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும் என்றும் சென்னையின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment