இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

3902467f6123061ff375662b83e08946

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையின்படி இன்று 10 மாவட்டங்களில் கனமழை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் எந்தெந்த பகுதியில் மழை என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

இன்று ஜூலை 6ஆம் தேதி: பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

நாளை ஜூலை 7ஆம் தேதி: தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

நாளை மறுநாள் ஜூலை 8ஆம் தேதி: திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஜூலை 9 மற்றும் 10-ம் தேதி: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு 

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment