Connect with us

5 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamil Nadu

5 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

9e69060f692d1025d3a4727ef0941016-1

சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் மழை குறித்த அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

மேலும் கோவை, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களில் தமிழக கடலோர பகுதி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

அதேபோல் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top