மக்களே உஷார்!! அடுத்த 2 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மலைப்போல் சரிந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச்செல்லும் நகை பிரியர்கள்..!!

அதன் படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர் , மயிலாடுதுறை. கடலூர். அரியலூர். கரூர். நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி திடீர் பயணம்: பின்னணி என்ன?

மேலும், சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment