வட தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரியில் இன்று பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அதே போல் நாளைய தினத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 4,5 தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர் , நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.