மக்களே உஷார்!! நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளைய தினத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து நாளைமறு நாள் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

அதே போல் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment