ரெடியா இருங்க! நாளை 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 05:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோமீட்டர் கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

கொரோனா முன்னெச்சரிக்கை! ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசு!!

இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்; மத்திய அரசு தகவல்..!!

நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.