மக்களே கவனம்!! இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்..

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் ஜூலை 16 முதல் 18ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், ஆந்திரா கரையோரப் பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment