கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமால பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
அதன் படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதே போல் திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம் ஒரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.