மக்களே உஷார்!! 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!

வடகிழக்கு பருமழை தமிழகத்தில் தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநகர பேருந்துகளில் ஒலிப்பெருக்கி.. உதயநிதி ஸ்டாலினின் தொடங்கி வைத்தார்!!

அதன் படி, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையை உலுக்கிய கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

இதனையடுத்து தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.