குஷியோ குஷி! 15 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! வானிலை அப்டேட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன் படி, குமரி கடல் பகுதியில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களிலும், தென்காசி, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விராட் கோலி பிறந்த நாள்! கிரிக்கெட் மைதானத்தில் கலக்கல் வீடியோ!!

இதனை தொடர்ந்து விருதுகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதே போன்று வருகின்ற 9-ம் தேதி வரையில் தமிழகத்தில் மழை நீட்டிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாணவி சத்யா கொலை வழக்கு: இளைஞர் மீது குண்டாஸ்!

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment