மாலை 4 மணி வரை கனமழை நீடிக்கும்! 6 மணி வரை விமான வருகை ரத்து!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே சென்னையில் மதியம் ஒரு மணிவரை கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மழை

ஆனால் தற்போது சென்னையில் மாலை 4 மணி வரை கனமழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் 4 மணி வரை கனமழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் மாலை 6 மணி வரை விமான வருகை ரத்து செய்யப் பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.கனமழை எதிரொலியால் சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை விமானங்கள் தரை இறங்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்புள்ளதால் சென்னையில் இன்று மாலை 4 மணி வரைக்கும் தற்போது பெய்து வரும் கனமழை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment