சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை கனமழை தொடரும்!

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து காணப்படுகிறது. இதன் விளைவாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை

சென்னையில் உள்ள பல சுரங்கப் பாதைகள் சாலைகள் வீடுகள் என அனைத்திலும் வெள்ளக் காடு போல மழைநீர் தேங்கியுள்ளது.தலைநகர் சென்னையில் நள்ளிரவு முதலே கனமழை பெய்தது.

இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளை நீருக்குள் மூழ்கி உள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இன்று மின் வினியோகம் துண்டிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த அதி தீவிர கனமழை இன்று மதியம் வரை தொடரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி சென்னையில் இன்று மதியம் ஒரு மணி வரை கனமழை தொடரும் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது.

இவை சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மதியம் ஒரு மணி வரை கனமழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment