தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் அதன் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்றும் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக மேலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment