இன்னும் சிறிது நேரத்தில் இடிமின்னலுடன் பலத்த மழை: சென்னைக்கு எச்சரிக்கை!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர மழை பெய்து வருகிறது என்பதும் வங்க கடலில் அடுத்தடுத்து தோன்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இந்த மழை விடாமல் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதனால் சென்னை மக்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மிக முக்கிய வேலை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும் அல்லது வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment