இன்று 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிக கனமழை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் ஒரு சில மாவட்டங்களில் இன்று முழுவதும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது 27 மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment