Connect with us

மக்களே நாளை வெளியே வராதீங்க! ‘மிக கனமழை’ எச்சரிக்கை.!!

கனமழை

தமிழகம்

மக்களே நாளை வெளியே வராதீங்க! ‘மிக கனமழை’ எச்சரிக்கை.!!

பொதுவாக வடகிழக்கு பருவமழையின் போது தான் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு கிடைக்கும். ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திற்கு மழை பொழிவு கிடைத்துக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த ஐந்து நாட்களில் தமிழகத்திற்கு கன மழை வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஜூலை 31-ஆம் தேதியான நாளைய தினம் மிக கனமழை வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளைய தினம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கலில் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top