Connect with us

இந்த வெயிலில் தென்மாவட்டங்களுக்கு லட்டு மாதிரி செய்தி! இன்று கனமழை எச்சரிக்கை!!

கனமழை

Tamil Nadu

இந்த வெயிலில் தென்மாவட்டங்களுக்கு லட்டு மாதிரி செய்தி! இன்று கனமழை எச்சரிக்கை!!

இந்த வெயிலில் தென்மாவட்டங்களுக்கு லட்டு மாதிரி செய்தி! இன்று கனமழை எச்சரிக்கை!!

நம் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இவ்வாறுள்ள நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை ஒன்றினை சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியால் இன்று தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top