9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

தமிழகத்தில் மழை குறித்த விவரங்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சற்றுமுன் அறிவித்துள்ளது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சில் வெப்ப சலனத்தால் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது. நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இதர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது

மேலும் ஜூலை 7, 8, 9 நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என்றும் கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment