Tamil Nadu
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த ஐந்து மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தின் மீது வளிமண்டலத்தில் 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் மேகக் கூட்டங்களின் சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
