3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை அப்டேட்!!

கடந்த அக்டோபர் 30-ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

அதன் படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உடல் பருமனா? தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.