இன்று 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் தற்போது 17 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

மேலும் இன்று அல்லது நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தெலுங்கானா ஆந்திரா ஒரிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment