தமிழகத்தின் கடந்த சில வாரங்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலம் இந்தியாவில் தொடங்கியது முதல் தமிழகத்தில் எதிர்பாராத விதமாக அதிக அளவில் கனமழை கிடைத்தது.
இதனால் பல மாவட்டங்களில் மழை நீர் தேங்கிய படியே காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்கள் மழை நீருக்குள் மூழ்கியது. இந்த நிலையில் கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குறிப்பாக இன்றைய தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
அதன்படி நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.