ரெட் அலர்ட், கனமழை: நாளையதினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

நம் தமிழகத்தில் தொடர்ந்து பல நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து காணப்படுவதால் பெருவாரியான மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்க்கிறது.

ஸ்கூல் லீவு

இன்று 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தான் சமீபகாலமாக உடனடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஏற்கனவே ரெட் அலார்ட் விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நாளைய தினம் விடுமுறை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நாளைய தினம் பள்ளி கல்லூரிகளில் விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். ஏற்கனவே புதுக்கோட்டை திருவாரூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment