தொடர்மழை: சென்னை உட்பட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரையை அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.

கனமழை

இதனால் சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் அடை மழை பெய்தன. கனமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நவம்பர் 20ஆம் தேதி ஆகிய நாளைய தினம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் நாளையதினம் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக ஐந்து மாவட்டங்களில் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இந்த தொடர் விடுமுறையால் மாணவர்கள் மிகுந்த குஷியில் காணப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment