Connect with us

மக்களே கவனம்!! 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!!

151452 150682 136036 rain2424

தமிழகம்

மக்களே கவனம்!! 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

நாளை மறுநாள் கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. வருகின்ற 18-ம் தேதி நாகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் கரூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் சாரல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top