எச்சரிக்கை!! 23 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 23 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்காதல் விவகாரம்: கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி, மகள்..!!!

அதேபோல் ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் திருவாரூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment