Connect with us

குஷியோ குஷி!! 17 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை!!

rain 2

தமிழகம்

குஷியோ குஷி!! 17 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ள கூறியுள்ளது.

மேலும், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top