மக்களே உஷார் !!! தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை…
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் மேற்குத்தொடர்ச்சிமலை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லட்சத் தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலணம் காரணமாக தமிழ்நாடு ,புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இதமாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்குதொடர்ச்சி மாவட்டங்களான ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
